சேவைகள்

திருமண பொருத்தம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்திருமண பொருத்தம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
திருமணமுகூர்த்தம் நிர்ணயம்  பக்கம் செல்ல கிளிக் செய்யவும்திருமணமுகூர்த்தம் நிர்ணயம்  பக்கம் செல்ல கிளிக் செய்யவும்

இறைவன் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையிலும் பலவிதமான போராட்டங்களையும், தடை தாமதங்களையும் கடந்து, அவரவர்களுடைய வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று, கடவுள் ஒவ்வொருவரின் வாழ்க்கை பாதையை நிர்ணயத்திருப்பார் என்றே சொல்லலாம், அதில் மிகப்பெரிய பந்தமாக இருப்பது திருமண வாழ்க்கை

திருமணமுகூர்த்தம் நிர்ணயம்

மணப்பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் நேரத்தில் குலதெய்வம், குடும்பதெய்வம், முன்னோர்கள் ,மும்மூர்த்திகள், தேவர்கள், உற்றார், உறவினர்கள், சான்றோர்களுடன், ஈன்றோரின்நல்லாசி கிடைக்க வேண்டும். நல்ல நாளில், நல்ல நேரத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் பொழுதுதான் திருமணம் என்னும் வாழ்க்கை......

எண் கணிதம் மூலம் பெயரிடுதல் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்எண் கணிதம் மூலம் பெயரிடுதல் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
எண் கணிதம் மூலம் பெயரிடுதல்

இவ்வுலகையே ஆளப்போவது எண்கள்தான் .தற்போது எதை எடுத்துக் கொண்டாலும் எண்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. உதாரணமாக, கடிகார மணி ,தொலைபேசி எண்கள், மேலும் உதாரணமாக உங்களின் வயது என்ன? உயரம் என்ன? எவ்வளவு தூரம்?’ எவ்வளவு எடை? எவ்வளவு நீளம்? இந்த கேள்விகளுமே எண்களை மையமாக வைத்து தான்......

தெய்வீக பிரசன்ன ஜோதிடம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்தெய்வீக பிரசன்ன ஜோதிடம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
தெய்வீக பிரசன்ன ஜோதிடம்

இறைவனால் அருளப்பட்டு, ரிஷிகளால் காகப்பட்ட இந்த தெய்வீக பிரசன்ன ஜோதிட முறை கடந்த காலங்களில் பலரின் கைகளில் மாட்டி மறைந்து கிடந்தது தற்போது பெரும்பாலானோர் பிரசன்னத்தை பற்றி தெரிந்துள்ளார்கள். பிரசன்னம் என்ற வடமொழி சொல்லுக்கு கேள்வி என அர்த்தம், கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரகங்களை கொண்டு..........

பொது ஆலோசனை பக்கம் செல்ல கிளிக் செய்யவும்பொது ஆலோசனை பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
பொது ஆலோசனை

இப்பிரபஞ்சம் உங்களிடம் இருப்பதை அடித்து பிடுங்கும் முன் கொடுத்து பழகினால் வாழ்க்கை இனிக்கும், ஆகவே தானதர்மங்கள் உங்களையும் உங்கள் குலத்தையும் நிச்சயம் காத்து நிற்கும்.

திருமண பொருத்தம்

எங்களை பற்றி

மிஸ்டர் . ஆன்லைன் ஆஸ்ட்ரோ அனைவரையும் இன்முகத்தோடு வணங்கி வரவேற்கிறது, இன்றைய தினம் தங்களுக்கு சிறப்புமிக்க நாளாக அமைய வாழ்த்துக்கள்.

........

எதற்காக நாங்கள்

ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கை போராட்டங்களையும் நெருக்கடிகளை கடந்துதான் அவர்களுடைய வாழ்வை அடுத்த கட்ட உயர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற அமைப்பில் இறைவன் அனைவரையும் படைத்துள்ளார். அதன் அடிப்படையில் இந்த நிகழ்வுகள் ஒருவர் ஜனனமாகும் போது சூரியன் நின்ற லக்ன புள்ளியும் சந்திரன் நின்ற நட்சத்திரத்தின் அடிப்படையில் நடக்கும் தசா புத்திக்கு ஏற்றவாறு அனைவர்களது வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளான திருமணம், குழந்தைபேரு, உடல் ஆரோக்கியம், நல்ல கல்வியை, புகழ் அந்தஸ்து, கலைதுறையில் சாதிப்பது, ஆளுமைத் திறன் மிக்க அரசியல் அரசு சார்ந்த வகையில் அனுகூலம், பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றங்கள், வீடு, வண்டி வாகனம், கடன், நோய் ,வம்பு வழக்குகள் ஏற்படும் காலங்கள் அறிந்து அதற்கு ஏற்றவாறு தன்னை பக்குவப்படுத்தி முன் எச்சரிக்கையோடு கடக்க அனுபவமிக்க ஜோதிடர்களின் ஆலோசனை அனைவருக்கும் உதவும் வகையில் இருக்கும்

மேஷம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்மேஷம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
துலாம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்துலாம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
விருச்சகம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்விருச்சகம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
தனுசு பக்கம் செல்ல கிளிக் செய்யவும்தனுசு பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
மகரம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்மகரம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
கும்பம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்கும்பம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
மீனம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்மீனம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்

மீனம்

ரிஷபம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்ரிஷபம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
மிதுனம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்மிதுனம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
கடகம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்கடகம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
சிம்மம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்சிம்மம் பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
கன்னி பக்கம் செல்ல கிளிக் செய்யவும்கன்னி பக்கம் செல்ல கிளிக் செய்யவும்

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மேலும் 12 ராசிக்காரர்களின் இயல்பான குணநலன்களை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்

எண் கணிதம் மூலம் பெயரிடுதல்

இவ்வுலகையே ஆளப்போவது எண்கள்தான் .தற்போது எதை எடுத்துக் கொண்டாலும் எண்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. உதாரணமாக, கடிகார மணி ,தொலைபேசி எண்கள், மேலும் உதாரணமாக உங்களின் வயது என்ன? உயரம் என்ன? எவ்வளவு தூரம்?’ எவ்வளவு எடை? எவ்வளவு நீளம்? இந்த கேள்விகளுமே எண்களை மையமாக வைத்து தான் அமைந்து உள்ளது. எண்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு சாஸ்திர முறை தான் எண்கணிதம். எண்களை கொண்டு உங்கள் மனதில் ஏற்படும் மாற்றங்களின் குணஅதிசயங்களை பிரதிபலிக்கும் கணித சாஸ்திரம். பிறந்த தேதி எண்,கூட்டு எண்,பெயர் எண் பிறக்கக்கூடிய அனைவரையும் இந்மூன்று எண்கள் அதற்கு ஏற்ற காரகத்துவ சிறப்பு இயல்புகள் மூலமாக இயக்குவிக்கிறது. பிறந்த தேதி எண் மற்றும் கூட்டு எண்களை நம்மால் மாற்ற இயலாது. ஆனால், பெயர் எண்ணை இந்த இரண்டு எண்களுக்கும் நட்பு விகிதத்தில் வரும்படி மாற்றி அமைக்கக்கூடிய வாய்ப்புகளை இறைவன் நமக்கு அளித்துள்ளார்.ஒருவரின் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் 80 % உறுதியாக வேலை செய்யும் மீதமுள்ள 20% எண்கணிதம் துல்லியமாக வேலை செய்யும் எனவே ஜனன ஜாதகத்தையும் எண் கணிதத்தையும் இணைத்து, பிறந்த தேதிக்கு ஏற்றவாறும் ஜனன ஜாதகத்துக்கு ஏற்றவாறும் கணக்கிட்டு ஆற்றல் மிக்க பெயர் சூட்டுவதன் மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை நம்மால் உருவாக்கி கொள்ள முடியும்.

பிறவி எண் or உடல் எண்

ஒருவர் பிறந்த தேதியின் அடிப்படையில் மட்டும் கூறுவது பிறந்த எண் அல்லது பிறவி எண் அல்லது உடல் எண் என்று அழைக்கப்படுகின்றது. பிறந்த தேதி எண் அடிப்படையில் ஒருவருடைய குணம், ஆசைகள் மற்றும் செயல்பாடுகளை அறியலாம்.

கூட்டு எண் (or) உயிர் எண் or விதி எண்

ஒருவர் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டி வருகின்ற எண்ணே விதி எண், கூட்டு எண் அல்லது உயிர் எண் என்று அழைக்கப்படுகின்றது. உயிர் எண் மூலம் எதிர்காலம், தொழில் மற்றும் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள இயலும்.

பெயர் எண்

ஒருவருடைய பெயரில் வருகின்ற அனைத்து எழுத்துக்களின் மதிப்பெண் அடிப்படையில் அமைவது பெயர் எண் ஆகும்.

எண் கணிதம் வைத்து வாழ்க்கைக்கு தேவையான பிரதானமான பலன்களையும் ஜோதிட சாஸ்திரம் போல கூற முடியாது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு எண்களில் எந்த எண் பலம்பெற்று உள்ளதோ? அந்த எண்ணிற்கு நட்பின் அடிப்படையில் நாம் பெயரை வைத்துக் கொள்வதன் மூலம் நம்மால் தந்திரமான அதிர்ஷ்டத்தை உருவாக்கி கொள்ள முடியும்.

ஆங்கில எழுத்துக்களும், அதற்குரிய எண்களும்

A, I, J, Q, Y – 1

B, K, R – 2

C, G, L, S – 3

D, M, T – 4

E, H, N, X – 5

U, V, W – 6

O, Z – 7

F,P – 8

மேற்கூறிய குறிப்புகளின்படி எண் 8 வரை ஆளுமைக்குட்பட்ட எழுத்துக்கள் இருக்கும். எண் 9ன் ஆளுமைக்குட்பட்ட எழுத்துக்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

எண்களும் கிரகங்களும்

சூரியன் – எண் 1

சந்திரன் – எண் 2

குரு – எண் 3

ராகு – எண் 4

புதன் – எண் 5

சுக்கிரன் – எண் 6

கேது – எண் 7

சனி – எண் 8

செவ்வாய் – எண் 9

ஒவ்வொரு எண்ணிற்கும் அதனுடைய ஆதிக்க கிரகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.உதாரணத்திற்கு 26.8.2016 அன்று பிறந்த ஜாதகருக்கு எண் கணிதத்தின்படி எவ்வாறு கணக்கிடுவது என்பதை பற்றி பார்ப்போம்,இவரின் உடல் எண்ணை காண்பதற்குப் முதலில் பிறந்த தேதியின் (26) எண்ணை மட்டும் கூட்ட வேண்டும்.

2 + 6 = 8

இவரின் உடல் எண் 8. ஆகவே, இவர் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர். இவர்வாழ்வில் ஏற்படும் சாதகமானயோகங்கள், முன்னேற்றங்கள் பற்றி காண்பதற்கு இவரின் உயிர் எண்ணைக் காண வேண்டும்.ஒரு ஜாதகரின் பிறந்த ஆங்கில தேதியில் வரும், தேதி, மாதம், வருடம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையே அந்த ஜாதகரின் உயிர் எண் ஆகும்.ஜாதகர் 26.8.2016 ல் பிறந்திருக்கிறார்

2 + 6 + 8 + 2 + 0 + 1 + 6 = 25 என வரும்

2 + 5 = 7 எனவே இந்த ஜாதகரின்

உயிர் எண் 7 ஆகும். அடுத்து பெயர் எண் என்றால் என்ன என்று பார்ப்போம்.ஜாதகரின் உயிர் எண் 7. இது கேது பகவானை குறிக்கும் எண்ணாகும்.இவருக்குப் பெயர் அமைக்கும் போது, ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் அடிப்படையிலும் கேதுவின் ஆதிக்கத்திலும் பெயர் அமைப்பதே சிறப்பாகும் . அல்லது 7 இன் நட்பு எண்ணின் ஆதிக்கத்தில் பெயர் அமைக்கலாம். 7 இன் மிக நெருங்கிய நட்பு எண் 8. இதே போல, எந்தெந்த எண்களுக்கு எந்தெந்த எண்கள் நட்பு எண்கள் என்பதனை இப்பதிவின் முடிவில் கொடுத்துள்ளேன் அதனை பார்த்துக் கொள்ளுங்கள்.பெயர் எண் கணக்கிடும் முறைஒரு ஜாதகரின் பெயரை கொண்டு கணக்கிடுவதே பெயர் எண் ஆகும். ஜாதகரின் பெயர் KAVIN . K என வைத்துக்கொள்வோம். மேற்கூறிய அட்டவணையில் எழுத்துக்கான எண்களை கொண்டு பெயர்எண் கணக்கிட வேண்டும்.

KAVIN . K

2 + 1 + 6 +1 + 5 + 2 = 17 ; 1 + 7 = 8

எனவே இந்த ஜாதகருடைய பெயர் எண் 8 ஆகும். பெயருக்கான எண்ணை கணக்கிடும்பொழுது வழக்கமாக பெயரை எப்படி எழுதுகிறோமோ அப்படிதான் எழுத வேண்டும். பெயருக்கு முன்னாள் மிஸ்டர், மிஸ், திருமதி, திரு, ஸ்ரீ, ஸ்ரீமதி மற்றும் பெயர்க்கு பின்னால் வரும் பட்டங்களையும் சேர்த்துக் கொள்ளக்கூடாது.இவ்வாறு ஒருவருடைய உயிர் எண்ணை கொண்டு அதற்கு நட்பு எண் வரும்படி பெயரை அமைக்க ஜாதகரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

எண்ணிற்கு ஏற்ற நட்பு எண்ணை காண்போம்.

எண் 1 – நட்பு எண் 1,2,3.9,5

எண் 2 – நட்பு எண் 1,2,9,3

எண் 3 – நட்பு எண் 1,2,3,9,8,4,7

எண் 4 – நட்பு எண் 8,6,5,3,4,7

எண் 5 – நட்பு எண் 1,5,6,8.4,7

எண் 6 – நட்பு எண் 5,8,6,4,7,9

எண் 7 – நட்பு எண் 8,6,5,3,4,7

எண் 8 – நட்பு எண் 5,6,4,7,3,8

எண் 9 – நட்பு எண் 1,2,3,6,9

குழந்தைக்கு பெயர் தேர்வு செய்யும்பொழுது குழந்தையின் உயிர் எண் கணக்கிட்டு பின்பு ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகத்தின் நிலைகளை அறிந்து அதற்கு ஏற்ற எண் அல்லது அதனுடைய நட்பு எண் வரும்படி பெயர் தேர்ந்தெடுக்க வேண்டும்.பிறந்த தேதி எண் மற்றும் கூட்டு எண்களை நம்மால் மாற்ற இயலாது. ஆனால், பெயர் எண்ணை இந்த இரண்டு எண்களுக்கும் நட்பு விகிதத்தில் வரும்படி அமைத்துக் கொள்ளலாம்.நன்கு கற்றுணர்ந்த ஜோதிட வல்லுனரின் ஆசியோடு நீங்கள் ஈன்றெடுத்த மழலைக்கு பெயர் சூட்டும்போது, பரிபூரண சகல தெய்வதேவதா அருள்கடாக்ஷம் நிரம்பப்பெற்று .வாழ்வில் எல்லா நலன்களையும், வளங்களையும் பெறுவார்கள்.திருமணப் பொருத்தமும் எண் கணிதமும்திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது அவரவர் பிறப்பு எண் மற்றும் விதி எண்ணுக்கு ஏற்ற சிறப்புமிக்க தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை யோகமாகும். மேலும் திருமணமநாள் குறிக்கும் பொழுது திருமண தேதியின் கூட்டு எண்ணும் திருமண தேதி, மாதம், வருடம் இவற்றின் கூட்டு எண்ணும் 1,3,6,9 என்று வருமாறு அமைப்பது சிறப்பு.உங்களையே நீங்கள் சாதனை நாயகனாக ஆழ்மனதில் பதிய வைத்து அடுத்த கட்ட உயர்வடைய விடா முயற்சியுடன் உழையுங்கள் நிச்சயம் வெற்றி உங்கள் அருகில். என வாழ்த்துக்களுடன் பாண்டிச்சேரி கிருஷ்ணா.

எண் கணித ஜோதிடம்

 எண் கணிதம் 1 பக்கம் செல்ல கிளிக் செய்யவும் எண் கணிதம் 1 பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
 எண் கணிதம் 2 பக்கம் செல்ல கிளிக் செய்யவும் எண் கணிதம் 2 பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
 எண் கணிதம் 3 பக்கம் செல்ல கிளிக் செய்யவும் எண் கணிதம் 3 பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
 எண் கணிதம் 4 பக்கம் செல்ல கிளிக் செய்யவும் எண் கணிதம் 4 பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
 எண் கணிதம் 5 பக்கம் செல்ல கிளிக் செய்யவும் எண் கணிதம் 5 பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
 எண் கணிதம் 6 பக்கம் செல்ல கிளிக் செய்யவும் எண் கணிதம் 6 பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
 எண் கணிதம் 7 பக்கம் செல்ல கிளிக் செய்யவும் எண் கணிதம் 7 பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
 எண் கணிதம் 8 பக்கம் செல்ல கிளிக் செய்யவும் எண் கணிதம் 8 பக்கம் செல்ல கிளிக் செய்யவும்
 எண் கணிதம் 9 பக்கம் செல்ல கிளிக் செய்யவும் எண் கணிதம் 9 பக்கம் செல்ல கிளிக் செய்யவும்