பிறப்பு எண் 6, 15, 24 ஆக உள்ளவர்கள் மற்றும் கூட்டு எண், விதி எண் 6ல் பிறந்தவர்களுக்கு பொதுவான பலன்கள், அதிர்ஷ்ட தேதிகள், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட ரத்தினம், தொழில் போன்றவற்றை விளக்கமாக பார்ப்போம்.
குறிப்பு: கூட்டு எண், விதி எண் ப்பற்றி அறிய எண் கணிதம் மூலம் பெயரிடுதல் பக்கத்திற்கு செல்லவும்.
அதிபதி: சுக்கிரன்
அதிர்ஷ்ட தேதிகள் – 6,15,24,9,18,27
அதிர்ஷ்ட நிறம் – வெண்மை நிறம், வெளிர்மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட ரத்தினம் – வைரம்
பொதுவான பலன்கள் (6, 15, 24)
கலை ஆர்வம் அதிகமாக இருக்கும். இயல்பாகவே அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். அழகிய கண்களை கொண்டிருப்பார்கள். கவிதை, நடனம், சங்கீதத்தில் ஈடுபாடு இருக்கும். எப்பொழுதும் சந்தோசமாக வாழவே நினைப்பார்கள். சோகக்கதைகள் பேசுவது பிடிக்காது.
ஆடம்பர வாழ்க்கை மற்றும் சுக போகங்களை அதிகமாக விரும்புவார்கள். அதேநேரம், ஆன்மீக நாட்டமும் கொண்டிருப்பார்கள். எந்த விஷயத்தையும் யோசிக்காமல் முடிவு எடுக்க மாட்டார்கள், பலமுறை சிந்தித்த பின்பே முடிவு எடுப்பார்கள், ஓவியம் வரைதல், இயல், இசை, நாடகம் போன்ற கலைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
தன்னை அலங்காரப்படுத்தி கொள்வார்கள். எப்பொழுதும் சிரித்த முகமுடையவர்கள். தாராள மனப்பான்மையும் உள்ளவர்கள். மற்றவர்களிடம் பிரியமுடன் நடந்து கொள்வார்கள். இயல்பு வாழக்கையில் எந்த குறையும் இருக்காது. படிப்பதில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள்.மனைவி, தாய் மூலம் அதிக லாபம் கொண்டவர்கள். சமாதான விரும்பி, விருந்து, கேளிக்கை, சினிமா இவற்றில் விருப்பம் இருக்கும்.
கண்ணியமானவர்கள். எப்போதும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் காணப்படுவார்கள். பேசும்போது ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். அனைத்து விதமான கலைகளையும் எளிதாக கற்றுக்கொள்வார்கள். பணம் மற்றும் பொருள் சேர்ப்பதில் ஆர்வம் உண்டு. யாரை பிடித்தால் வேலை நடக்கும் என்று தெரிந்து காரியம் சாதித்து கொள்வார்கள்.
வசீகரமான தோற்றம் உடையவர்கள். மிகச்சிறந்த பேச்சாளர்கள். யாரையும் நகைச்சுவையாக பேசியே வசியம் செய்வார்கள். கலைகள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். பழகிய சிறுது நேரத்திலேயே மற்றவர்களை புரிந்துகொள்வதில் வல்லமை பொருந்தியவர்கள். சிலர் சதா பேசிய வண்ணம் இருப்பார்கள்.
மிகவும் பணிவானவர்கள். வேலை செய்யும் இடத்தில மேல் அதிகாரிகளின் ஆதரவு எப்பொழுதும் உண்டு. ஆடம்பர பிரியர்கள். சிலருக்கு சிறு வயதிலேயே கல்வி தடை உண்டாகும், மற்றவர்களின் உதவியால் கல்வி கற்பார்கள் ,சுய ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் அமைந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான மனைவியும் வாழ்க்கையும் அமையும்.
தொழில்கள்
விலை உயர்ந்த துணிகள் விற்பனை, பட்டு விற்பனை, உயர்ரக ரத்தினங்கள், ஆடம்பர பொருட்கள், மற்ற விலையுயர்ந்த பொருட்கள், மாளிகை போன்ற வீடுகள் கட்டுதல், அழகு சாதன பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை, கண்ணாடி, வாசனை திரவியங்கள், சந்தனம், அணிகலன்கள், தெய்வீக சம்பந்தமான நூல்கள் எழுதுதல், போன்றவை மூலம் அதிக லாபம் உண்டாகும். 6,9ஆம் எண் காரர்களை தொழில் கூட்டாளியாக சேர்த்தால் தொழிலில் வெற்றி பெறலாம்.
மிஸ்டர். ஆன்லைன் ஆஸ்ட்ரோ
தொடர்புக்கு
krishna@mronlineastro.com
+919940864640
✔திருமணம் ✔தொழில் ✔வியாபாரம் ✔உடல்நலம் ✔கல்வி ✔பணம் போன்றவற்றுக்கு சிறந்த பிரபல ஜோதிடர் ஆர்.கிருஷ்ணாவிடமிருந்து மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் ஆன்லைன் ஆலோசனையைப் பெறுங்கள். நீங்கள் நேரடியாக கலந்தாலோசிக்க விரும்பினால், நீங்கள் வருகைக்கு முன் தொலைபேசியில் உங்கள் சந்திப்பு தேதி மற்றும் நேரத்தைப் பெறவும்.
Quick links
Copyright 2024 @ Mr. Online Astro.com | All rights reserved. Designed by Mr.NSK !!
+919789732289