பிறப்பு எண் 1, 10, 19, 28 ஆக உள்ளவர்கள் மற்றும் கூட்டு எண்,  விதி எண் 1 ல் பிறந்தவர்களுக்கு பொது பலன்கள்,

அதிர்ஷ்ட தேதிகள், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட ரத்தினம், தொழில் போன்றவைகளுக்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்.

குறிப்பு: கூட்டு எண், விதி எண் ப்பற்றி அறிய எண் கணிதம் மூலம் பெயரிடுதல் பக்கத்திற்கு செல்லவும்.

அதிபதி: சூரியன்

அதிர்ஷ்ட தேதிகள் – 1,10,19,28,4,13,22,31

அதிர்ஷ்ட நிறம் – சிகப்பு, மஞ்சள்

அதிர்ஷ்ட ரத்தினம் – மாணிக்கம் மற்றும் மஞ்சள் புஷ்பராகம்

1, 10, 19, 28 ல் பிறந்தவர்களுக்கான பொதுவான பலன்கள்

எப்பொழுதும் உஷ்ணமான சரீரத்தை கொண்டிருப்பார்கள். இவர்கள் யாருக்கும் வளைந்து கொடுத்து போக மாட்டார்கள். பயமுறுத்தலுக்கு அஞ்சாதவர்கள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுபவர்கள்.

இவர்களுக்கு நிர்வாகத்திறன் அதிகம் என்பதால் வேலை செய்யும் இடத்தில உயர் பதவி, அரசாங்க வேலைகள், அரசாங்க அனுகூலம் கிடைக்கும். அனைவரையும் நம்ப மாட்டார்கள். சிலரையே நண்பர்களாக கொண்டிருப்பார்கள். நாகரிகமாக நடந்து கொள்ள விரும்புவார்கள்.

இவர்கள் புகழுக்கு அடிமையானவர்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் கௌரவம் பார்ப்பார்கள். நடுத்தர உயரமும் கம்பீரமான உடல் அமைப்பும் கொண்டவர்கள். அரசியலில் ஆர்வம் இருக்கும். சாஸ்திரத்தில் ஈடுபாடு உண்டு. இவர்களுடைய ஜாதகத்தில் சூரியன் வலிமையுடன் இருப்பது மிகவும் நல்லது.

தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். இவர்களுக்கு மற்றவர்களுடைய ஆலோசனைகளை கேட்க விருப்பம் இருக்காது. கனமான குரலில் பேசுவார்கள். மனதில் உள்ளதை மறைக்காமல் வெளிப்படுத்துவார்கள். யாருடைய பேச்சையும் கேட்காமல் தன இஷ்டப்படி நடப்பார்கள்.

பழகுவதற்கு இனிமையானவர். எப்பொழுதும் பொறுமையுடன் நடந்துகொள்வார்கள். மனதில் உள்ளதை வெளிப்படுத்த சற்று தயக்கத்துடன் வெளிப்படுத்துவார்கள். பாசம் அதிகம் கொண்டவர்கள். எளிதில் யாரையும் விரோதிக்க மாட்டார்கள். இவர்களிடம் அன்பு காட்டினாள் எளிதில் அடிமையாகி விடுவார்கள்.