பிறப்பு எண் 3, 12, 21, 30 ஆக உள்ளவர்கள் மற்றும் கூட்டு எண், விதி எண் 3 ல் பிறந்தவர்களுக்கு பொது பலன்கள், அதிர்ஷ்ட தேதிகள், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட ரத்தினம், தொழில் போன்றவைகளுக்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்.

குறிப்பு: கூட்டு எண், விதி எண் ப்பற்றி அறிய எண் கணிதம் மூலம் பெயரிடுதல் பக்கத்திற்கு செல்லவும்.

அதிபதி: குரு

அதிர்ஷ்ட தேதிகள் – 3,12,21,30,9,18,27

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள், ஊதா நிறம்(Skyblue)

அதிர்ஷ்ட ரத்தினம் – கனக புஷ்பராகம்

3, 12, 21, 30 ல் பிறந்தவர்களுக்கான பொதுவான பலன்கள்

இயல்பாகவே பொறுமையானவர்கள். தன்னம்பிக்கை உடையவர்கள். பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். நம்பிக்கைக்கு உடையவர்கள். அதிகம் கௌரவம் பார்ப்பார்கள். பணத்தை விட குணத்தையும் கௌரவத்தையும் பெரிதாக நினைப்பார்கள்.

பழைய கொள்கைகள் சம்பர்தாயங்கள் மேலும் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். முன்னோர்களின் கூற்றுப்படி வாழ்க்கை நடத்துவார்கள். தான தர்ம சிந்தனை கொண்டவர்கள்.

தெளிவான அறிவும், ஆன்மிக நாட்டம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். நீதி நேர்மை, நியாயம் பேசுவார்கள். தவறு செய்ய வாய்ப்புகள் அமைந்தாலும் நேர்மையாக முன்னேறுவதை விரும்புவார்கள்.

நற்சிந்தனை சக்தியுடையவர்கள். தெய்வ பக்தியும் உடல் பலமும் கொண்டவர்கள். அடுத்தவர்களை கணக்கிடுவதில் திறமை வாய்ந்தவர்கள். கணிதத்தில் திறமை உடையவர்கள். இவர்களது வாழ்க்கை உயர்வாகவும் கௌரவமாகவும் அமையும்.

நல்ல உழைப்பாளி. நல்ல பேச்சாளர்கள். தியாக சிந்தனை கொண்டிருப்பார்கள். மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என எண்ணுவார்கள். மற்றவர்களின் சூழ்நிலைகளை உணர்ந்து செயல்படுவார்கள். மொத்தத்தில் சாமர்த்தியசாலி.

புத்திசாலி. செய்த செயலுக்கு கூலி எதிர்பார்ப்பார்கள். சில நேரங்களில் காரியவாதியாகவும் இருப்பார்கள். பெரும்பாலும் வாழ்க்கை போராட்டமாகவே இருக்கும். சொந்த முயற்சியால் முன்னேறி வெற்றியை பூரணமாக அனுபவிப்பார்கள்.

தீர்க்கமான சிந்தனை உடையவர்கள். தன் இஷ்டப்படி நடப்பார்கள், நெஞ்சழுத்தம் கொண்டவர்கள். யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார்கள். யாருடைய உதவியையும் எதிர்பாராமல் கம்பீரமாக வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். நுட்பமான அறிவும், மிகுந்த துணிச்சலும் உடையவர்கள். கலைகளை கற்றுக்கொள்ள விரும்புவார்கள்.

கவனமாக இருக்க வேண்டிய தேதிகள்

6,15,24ஆம் தேதிகள்.

தொழில்கள்

பள்ளிக்கூட ஆசிரியர்கள், வங்கி மற்றும் பொருளாதார சம்பந்தமான இடத்தில் வேலை, அரசு தொழில், தர்ம ஸ்தாபனம், விஞ்ஞான அறிவு சம்பந்தமான வேலை, தர்ம ஸ்தாபனம், அறக்கட்டளை துவங்குதல், தத்துவ ஆராய்ச்சி, அர்ச்சகர், கணக்கர் ஆலோசனை தொழில் ஆகியவை சிறப்பை தரும். 9,18,27 ஆகிய எண் காரர்களை தொழில் கூட்டாளியாக சேர்த்துக் கொள்ளலாம்.