பிறப்பு எண் 2, 11, 20, 29 ஆக  உள்ளவர்கள் மற்றும் கூட்டு எண்,  விதி எண் 2 ல் பிறந்தவர்களுக்கு பொதுவான பலன்கள், அதிர்ஷ்ட தேதிகள், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட ரத்தினம், தொழில் போன்றவைகளுக்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்.

குறிப்பு: கூட்டு எண், விதி எண் ப்பற்றி அறிய எண் கணிதம் மூலம் பெயரிடுதல் பக்கத்திற்கு செல்லவும்.

அதிபதி: சந்திரன்

அதிர்ஷ்ட தேதிகள் – 2,11,20,29,7,16,25

அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை, மஞ்சள், இளம்பச்சை

அதிர்ஷ்ட ரத்தினம் – முத்து, மாணிக்கம் மற்றும் சந்திர காந்தக்கல்

2, 11, 20, 29 ல் பிறந்தவர்களுக்கான பொதுவான பலன்கள்

கற்பனை சக்தி அதிகம் கொண்டவர்கள். பொறுமையான குணம். எப்பொழுதும் எதிர்காலத்தை பற்றிய சிந்தனையுடன் இருப்பார்கள். புதிய நுட்பமான விஷயங்களை ஆராய்ந்து கண்டு பிடிப்பார்கள்.

தெய்வபக்தியும் குருபக்தியும் கொண்டவர்கள். இவர்களுக்கு பொதுவாக மற்றவர்களை உடனே நம்ப மாட்டார்கள், பலமுறை ஆராய்ந்த பின்னரே நட்பு கொள்வார்கள்.

எப்போதும் புத்தி ஒரே மாதிரி இருக்காது, மாறிக்கொண்டே இருக்கும் அதனால் முடிவு எடுப்பதில் தடுமாறுவார்கள். இக்கரைக்கு அக்கறை பச்சை என்பது போலத்தான். மற்றவர்களை விட சிறப்பாக யோசனை சக்தி உடையவர்கள்.

இவர்களுடைய சுய ஜாதகத்தில் சந்திரன் வலுவாக இருந்தால் கதை, கவிதை மற்றும் எழுத்தாளராக இருக்க வாய்ப்புகள் அதிகம். மேலும், சிறந்த ஞாபக சக்தியும் புத்தி கூர்மையும் கொண்டவர்கள். அதுவே சந்திரன் பலமிழந்து இருந்தால் சந்தேக புத்தியும் ஞாபக மறதியும் அதிகம் இருக்கும்.

எதை பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலுடன் எதையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

உயர்ந்த லட்சியங்களை கொண்டிருப்பார்கள். கற்பனை சக்தி அதிகம் கொண்டவர். சமூக சிந்தனை உள்ளவர்கள் என்பதால் புரட்சிகரமான எண்ணம் உள்ளவர்கள். கவிதை, கதை எழுதுவதில் வல்லவர். இசை பிரியர்கள். இவர் சில சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆராய்ச்சி செய்யும் எண்ணம் இருக்கும்.

இவர்களுக்கு தெய்வ அனுகூலம் எப்போதும் உண்டு. சமாதானம் விருப்பம் உள்ளவர்கள். எந்த விஷயமானாலும் எளிதில் முடித்து விடுவார்கள். பெரும்பாலும் மற்றவர்களுக்கு தீங்கு நினைகாத நல்ல மனம் உள்ளவர்கள். வாக்கு பலிதம் கொண்டார்கள். ஜோதிடத்துறையில் நாட்டம் இருக்கும். சாஸ்திரங்களை பின்பற்றுபவர்களாக இருப்பார்கள்.

உயர்ந்த குணம் உள்ளவர்கள், மேதை, நல்ல எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் பேரறிஞர்களாக இருப்பார்கள். உயர்ந்த பேர் சொல்லும் தலைவராக இருப்பார்கள். பொதுநலம் சிந்தனை அதிகம் என்பதால் அவர்கள் வசிக்கும் இடத்தில புகழ் பெற்று உயர்வார்கள். அதேபோல் அவர்களுடைய சுய ஜாதகத்தில் சந்திரன் கெட்டு போயிருந்தால் புகழுக்கு பதிலாக கெட்ட பெயர் கிடைக்கும். மக்கள் வெறுப்புக்கும் ஆளாவார்கள்.

வேகமானவர்கள். வீராப்பு அதிகம், சங்கம் அல்லது பஞ்சாயத்து தலைவர்களாக இருப்பார்கள். சமாதானம் விருப்பம் இருக்காது. இவர்களுடைய செயல் அல்லது முடிவு மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். அதனால் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பழகியவர்கள் எல்லாம் என்னை ஏமாற்றியவர்களாக கூறுவார்கள். தன் தேவைக்கு மற்றவர்களை பயன்படுத்துவர் நண்பர்களால் பலனில்லை.

8,17, 26ஆம் தேதிகள் கவனமாக இருக்க வேண்டும்.

தொழில்கள்

இவர்களுக்கு கவிதை எழுதுவது, கதை ஆசிரியர், வக்கீல் தொழில், ஓவியம் வரைதல், சங்கீதம், சிற்பம் செதுக்குதல், விவசாயம், ஜவுளி வியாபாரம், பால்பண்ணை, காபி, டீ, கடைகள், மளிகை கடைகள், திரவ மருந்துகள், குளிர்பானங்கள் கடை, மதம், கடவுள், சாஸ்திரம் சம்பந்தமான தொழில், பழங்கள், காய்கறிகள், பூக்கடை யில் அதிக லாபம் உண்டு.