பொது ஆலோசனை

பெற்ற தாய் தந்தையரை மதித்து, கணவன் மனைவி இருவருக்கும் ஒளிவு மறைவு இன்றி இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியுடன் பெற்ற பிள்ளைகளை நன்னெறியோடு வளர்த்து, பேராசைப்படாமல் , அண்டை அயலாரிடம் வஞ்சக உணர்வின்றி, நன்கு உழைத்து பொருளாதாரத்தில் உயர்வு பெற்று, இல்லாதவருக்கு தான தர்மங்கள் செய்து பெருந்தன்மையுடன் வாழ்பவரே மனித உருவில் இறைவன், ஜெயிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் கண்ணுக்குத் தெரிய வேண்டியது காரணங்கள் அல்ல இலக்கு மட்டுமே.

வான்மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் கோள்கள் இவற்றின் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் மூலமாக இந்த பூமியில் ஜெனிக்கக்கூடிய ஒவ்வொரு உயிர்இனங்களையும் இயக்கிக்கொண்டிருக்கிறது, இப்படி எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் பஞ்சபூதங்களையே மதித்து இறைவனாக வணங்க வழி வகுத்ததே நம் முன்னோர்களின் தனிச்சிறப்பு.உதாரணமாக சூரியஒளியும் அதிலிருந்து வரக்கூடிய மின்காந்தகதிர்வீச்சுகள் இந்த பூமியில் படவில்லை என்றால் எந்தவிதமான உயிரினங்களும் வளராது.

Bright living room with modern inventory
Bright living room with modern inventory

ஒருசில நபர்கள் அதீதஅறிவுடன் நினைவாற்றல் மிக்கவர்களாகவும், இதற்கு மாறாக சில நபர்கள் நினைவாற்றலும் சமயோகித புத்தியின்றி வாழ்க்கையில் ஒரு நாளை கடப்பதையே ஒரு வருடமாக எண்ணி கடும் துயரத்துடன் கடக்கும் நபர்களும் இப்பிரபஞ்சத்தில் இருக்கிறார்கள் அதற்கு காரணம் வான்மண்டலத்தில் உள்ள கோள்களும் நட்சத்திரங்களும் அது வெளியிடும் கதிர்வீச்சுகளின் அதிர்வலைகளின் மாறுபாடே இதற்கு காரணம்.

ஒரு மனிதனை நிலைநிறுத்தும் தூண் அவரவரின் சுய சிந்தனையே , விதியை மதியால் வெல்லலாம் , அதீத அறிவாற்றல் இருந்தால் வாக்குவன்மையுடனும் சமயோகித புத்தியுடன் இவ்வுலகே உங்களை வியந்து பார்க்கும் அளவிற்கு உங்களின் வெற்றி இருக்கும்.

ஒரு பந்தை சுவற்றில் எந்த வேகத்தில் வீசுகிறீர்களோ அதே வேகத்தில் உங்களை நோக்கி அந்தப் பந்து வந்தடையும் என்பதற்கிணங்க நல்லதையே நினையுங்கள் நல்லதையே செய்யுங்கள் உங்களுக்கும் உங்களால் ஏற்படும் அடுத்த தலை முறை வாரிசுகளுக்கும் நல்லதே நடக்கும்.

கடல் அலைகளில் பௌர்ணமி நிலவு கலங்கலாக தெரியும், ஆழமான கிணற்றில் பௌர்ணமியின் நிலவு அழகாக தெரியும், அலைபாயும் உங்கள் மனதை அடக்க தியானம், தவம் மூலமாக உங்கள் சுய சிந்தனையை, அறிவாற்றலை, சமயோகித புத்தியை மேம்படுத்திக் கொள்ளலாம், இதற்காக எந்நேரமும் தியானம் தவத்தில் இருப்பது தவறு ,உழைக்க வேண்டும் அதே சமயத்தில் அறிவோடு உழைத்தால் தான் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

இப்பிரபஞ்சம் உங்களிடம் இருப்பதை அடித்து பிடுங்கும் முன் கொடுத்து பழகினால் வாழ்க்கை இனிக்கும், ஆகவே தானதர்மங்கள் உங்களையும் உங்கள் குலத்தையும் நிச்சயம் காத்து நிற்கும்.

பொருளாதாரம் உள்ள நபர்களுக்கான பதிவு இது:-

கோவிலில் கொடுக்கும் அன்னதானத்தை சாப்பிட்டால்தான் இறைவன் நல்லாசி வழங்குவார் என்ற தவறான கருத்தை விட்டொழித்து , ஆதரவற்ற முதியோர், ஏழை எளியோர், அனாதை இல்லங்கள் , அடுத்த வேலை உணவின்றி ஊரு விட்டு ஊரு வந்து போராடி வேலை பார்க்கும் நபர்கள் ஆகியோர்களுக்கு அன்னதானம் கிடைக்கச் செய்வதும் மிகப் பெரிய புண்ணியமே.

மனிதப் பிறவியே மிக மிக அற்புதமான பிறவி மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு மனித பிறவிக்கு உண்டு, அறிந்தவன் அறியாதவனை ஏமாற்றி வாழும் என்னத்தை தவிர்த்து வாழும் சில காலங்களில் கண் முன் காணும் மனிதர்களிடம் அன்பாக அனுசரித்து அடுத்த தலைமுறையினருக்கு முன் உதாரணமாக வாழ்வோம்.