பிறப்பு எண் 5, 14, 23 ஆக உள்ளவர்கள் மற்றும் கூட்டு எண், விதி எண் 5ல் பிறந்தவர்களுக்கு பொதுவான பலன்கள், அதிர்ஷ்ட தேதிகள், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட ரத்தினம், தொழில் போன்றவைகளுக்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்.

குறிப்பு: கூட்டு எண், விதி எண் ப்பற்றி அறிய எண் கணிதம் மூலம் பெயரிடுதல் பக்கத்திற்கு செல்லவும்.

அதிபதி: புதன்

அதிர்ஷ்ட தேதிகள் – 5,14,23,6,15,24

அதிர்ஷ்ட நிறம் – பச்சை நிறம், சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட ரத்தினம் – மரகதப்பச்சை

பொதுவான பலன்கள் (5, 14, 23)

எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்களுடனே இருந்துகொண்டே இருப்பார்கள். கேளிக்கை நகைச்சுவையாக பேசுபவர்கள். வியாபாரம் செய்வதில் எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். மந்திர சாஸ்திரம் படிக்க பிடிக்கும். தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்வார்கள்.

எந்த விஷயத்தையும் சுலபமாகவும் வேகமாகவும் கற்றுக்கொள்வார்கள். மற்றவர்களை விட வேகமாக சிந்திக்க கூடியவர்கள். நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்கள் அதனால் எவரிடமும் சுலபமாக பழகிவிடுவார்கள்.

தன்னம்பிக்கை நிறைந்தவர். பழைய கதை பேசுவது பிடிக்காது இப்போது உள்ள புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள விரும்புவார்கள். நாகரிகமாக நடந்துகொள்வார்கள். சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றி பேசக்கூடியவர்கள் அதனால் பலநேரங்களில் பொய்களை பேசுவார்கள்.

இவர்களை புகழ்ச்சிக்கு அடிமையானவர்கள். மனம் போகும் போக்கிலே வாழ நினைப்பார்கள். பிடித்ததை உடனே வாங்கவேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள். அதனை மாற்றிக்கொண்டு வாழ்ந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்.

சிறு வயதிலிருந்தே பெரிய லட்சியங்களை கொண்டிருப்பார்கள். வசீகரமான குணம் கொண்டவர்கள். பிறரிடம் பழகும் விதம், பெரியோர்களை மதிக்கும் குணம் நிறைந்திருக்கும். சிந்தனை திறன் அதிகமாக இருக்கும். பிறர்க்கும் அறிவுரை கூறுவது போன்ற தொழில் அமையும்.

பிரயாணத்தில் ஆர்வம் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் சேரும். ஒரு கால கட்டத்தில் பணப்புழக்கம் சேரும் அதனை சேமித்தல் நல்லது. எப்பொழுதும் இவர்களை சுற்றி ஒரு கூட்டம் உறவினர்கள் அல்லது நண்பர்கள் இருந்து கொண்டே இருக்கும். நண்பர்களிடம் இருந்து உதவி கிடைக்கும்.

சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போதுமே இவர்களுக்கு இருக்கும். வசீகரமானவர்கள். அனைவரையும் பேசியே கவருவார்கள், சில நேரத்தில் அவை எதிராகவும் மாறலாம். பெரிய பெரிய நபர்களிடம் இருந்து பாராட்டுகளை பெறுவார்கள். திறமை இருந்தால் உலகத்தை வெற்றி பெறலாம் என்று எண்ணக்கூடியவர்கள்.

தொழில்கள்

இயல்பாகவே வியாபார எண்ணமும், பேச்சு திறமையும் கொண்டவர்கள் என்பதால் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள். எந்த தொழில் செய்தலும் மக்களின் ஆதரவு இவர்களுக்கு உண்டு. தரகு தொழில், கமிஷன், ஏஜென்ட் தொழில், சிறப்பாக இருக்கும்.ஆடிட்டிங், கணக்கு வாத்தியார், (CA) சார்ட்டட் அக்கௌன்ட், பைனான்ஸ் தொழில், கதை, கட்டுரை எழுதுவது, ஜோதிடம் போன்ற தொழில்களும் சிறப்பாக இருக்கும்.

இவர்கள் 1,4,5,9 எண்காரர்களை கூட்டாளியாக சேர்த்து கொண்டால் கூட்டுத்தொழில் சிறப்பாக இருக்கும். மற்ற எண்களில் பிறந்தவர்கள் சுமாரான பலனே என்பதால் அவர்களிடம் கூட்டுத்தொழில் தவிர்த்தல் நல்லது.