பிறப்பு எண் 8, 17, 26 ஆக உள்ளவர்கள் மற்றும் கூட்டு எண், விதி எண் 8ல் பிறந்தவர்களுக்கு பொதுவான பலன்கள், அதிர்ஷ்ட தேதிகள், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட ரத்தினம், தொழில் போன்றவைகளுக்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்.

குறிப்பு: கூட்டு எண், விதி எண் ப்பற்றி அறிய எண் கணிதம் மூலம் பெயரிடுதல் பக்கத்திற்கு செல்லவும்.

அதிபதி: சனி

அதிர்ஷ்ட தேதிகள் – 8,17,26,5,14,23ஆம் தேதிகள் அதிர்ஷ்டமானவை

அதிர்ஷ்ட நிறம் – கருநீல நிறம்

அதிர்ஷ்ட ரத்தினம் – நீலக்கல், இந்திர நீலக்கல்

பொதுவான பலன்கள் (8, 17, 26)

அதீத மனோதிடம் உள்ளவர்கள். கடின உழைப்பாளி, பிறர் உதவியை எதிர்பார்க்க மாட்டார்கள். தெளிந்த அறிவும், எப்பொழுதும் தொழில் பற்றி ஏதாவது சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு வெற்றி என்பது எளிதாக கிடைத்துவிடாது இருப்பினும் எதையும் கஷ்டப்பட்டு வெற்றி காண்பார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் நிதானத்தை பிடித்தாலும் எப்பொழுதும் எதையோ பறிகொடுத்தவர் போல காணப்படுவார்கள். மற்றவர்களை எளிதில் நம்ப மாட்டார்கள். தனிமையை அதிகம் விரும்புவார்கள். எந்த வேலையை தொடங்கினாலும் பல இடையூறுகளுக்கு பின்னரே அந்த வேலை முடியும்.

எதையும் எதிர்பார்க்காமல் பழகுவார்கள். உடலில் சரும வியாதிகள், அடிக்கடி சிறு விபத்துக்கள், காயங்கள் போன்றவை ஏற்படும். மற்றவர்கள் தவறு செய்தால் கூட 8ஆம் எண்ணில் பிறந்தவர்கள் மேல்தான் சந்தேகம் வரும். மற்றவர்களுக்காக சில நேரம் பழியை சுமப்பார்கள். வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் கஷ்டப்பட்டாவது அதில் வெற்றி பெறுவார்கள். அதிர்ஷ்டத்தை விட உழைப்பை நம்புவார்கள்.

அதிர்ஷ்டத்தை விட உழைத்து முன்னேற வேண்டும் என்று எண்ணுவார்கள். மற்றவர்களுக்கு வாழ்க்கை சம்பந்தமான போதனை செய்வதில் வல்லவர்கள். தனிமையாக அமைதியான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். பல இடையூறுகளை தாண்டி வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள். இவர்களுக்கு பொதுநல சேவை செய்வது பிறக்கும்.

அசுரத்தனமான உழைப்பாளி, உடல் வலிமையையும் மனவலிமையும் அதிகம். பல்வேறு கஷ்டங்கள் சோகங்கள் நேர்ந்தாலும் விடாமுயற்சியை கைவிட மாட்டார்கள். தோல்வியை கண்டு கண்கலங்க மாட்டார்கள். வாழ்க்கையில் முற்பகுதி அல்லது பிற்பகுதியில் புகழ் கிடைக்கும். மன உறுதி படைத்தவர் என்பதால் காவல்துறை, ராணுவத்துறையில் பதவி வகிப்பார்கள்.

அடிக்கடி நண்பர்களை நம்பி ஏமாறும் சூழ்நிலை உண்டாகும். வயதான காலத்தில் நோய் தொற்று அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது, உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் தடை, தோல்வி உண்டாகலாம், விடாமுயற்சியுடன் இருந்தால் வெற்றி பெறலாம். பணம், பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களுக்கு இளம்வயதில் சாதகமான வாழ்க்கை அமையும்.

தொழில்கள்

மற்றவர்களுக்கு அறிவுரை அல்லது போதனை செய்வது. பேருந்து போக்குவரத்து, லாரிகள், சுரங்கத்துறையில் வேலை, இரும்பு சம்பந்தமான தொழில்கள், ஆயுதங்கள் உற்பத்தி, சோப்பு, எண்ணெய் வியாபாரங்கள் மற்றும் உற்பத்தி , எண்ணெய் சுத்திகரிப்பு மில், அச்சுக்கூடம், அலுவலக உதவியாளர்கள். நகைப்பட்டறை, இரும்புபட்டறை, மீன், இறைச்சி வியாபாரம், மதுக்கடை நடத்துதல், வாகனங்கள் பழுது பார்த்தால், தோல் சம்பந்தமான தொழில்கள் மூலம் வருமானம் உண்டு.