கடகம்

  • பொறுமையின் சிகரமாகவும் தாயுள்ளம் கொண்டவர்களாகவும் எதிர்காலத்தை முன்கூட்டியே வகுத்து அதற்கு ஏற்றவாறு வாழ்க்கையை நடத்துபவர்கள்.

  • அறிவாற்றல் மிக்கவர்கள்.

  • வீடு, வண்டி வாகனம், பொருளாதார உயர்வுபெற தன் உழைப்பைக் கொண்டு அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள்.

  • எளிமையும் சகிப்புத் தன்மையும் கொண்டவர்கள்.

  • திட்டமிட்டு தன் பெரும் கனவை நினைவாக்கி வாழ்வை வெல்லக்கூடியவர்கள்.

  • அரசியல், அரசு சார்ந்த நபர்களுடன் தொடர்பில் இருக்கக்கூடியவர்கள்.

  • ஒரு சில நோய்கள் ஏற்பட்டாலும் ஆயுள் பலம் மிக்கவர்கள்.

  • நிதானத்துடனும், சுயநலத்துடனும், அரவணைப்புடனும் கருணை உள்ளம் கொண்டவர்கள்போல் இருந்து தனது காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறன் மிக்கவர்கள்.

  • இவர்கள் செய்யும் உதவிக்கு பிரதி பலனை கண்டிப்பாக எதிர்பார்ப்பார்கள்.

  • பதவி அந்தஸ்து புகழ் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள், எனது என்குடும்பம் என்ற பற்றுடன் சற்று சுயநலம் மிக்கவர்கள், அறிவாளிகள்.